web log free
September 12, 2025

இலங்கையில் தொடர்ந்தும் இளம் பெண்கள் காணாமல் போகின்றனர்

நாவின்ன – மஹரகம பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமியொருவ் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சிறுமி கடந்த 7ம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் ஊடாக, சிறுமி தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் மேலும் கூறுகின்றனர்.

பெயர் :- நேஹா கௌமதி ஹேரத்

வயது :- 15

சிறுமி தொடர்பிலான தகவல் :- 5 அடி 3 அங்கும் உயரம்

இறுதியாக அணிந்திருந்த ஆடை :- பச்சை நிறத்திலான ரிசேட் மற்றும் கருப்பு நிறத்திலான காற்சட்டை

சிறுமி தொடர்பிலான தகவல் கிடைக்கும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி :- 071 8591645

மஹரகம பொலிஸ் நிலையம் :- 011 2850222 / 011 2850700

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd