உள்நாட்டு சந்தையில் அரிசியின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திறந்த சந்தையில் போதியளவு அரிசி கையிருப்பு இருப்பதை உறுதி செய்வதற்காக இவ்வாறு அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்மொழிந்துள்ளார்.
இதன்படி, 200,000 மெற்றிக் தொன் நாட்டரிசி மற்றும் சம்பா அரிசிக்கு மாற்றாக 100,000 மெற்றிக் தொன் GR 11 குறுகிய தானிய அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.