web log free
November 26, 2024

சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான உபகுழு இன்று வருகிறது

சித்திரவதைகள் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உபகுழு இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்த அளவு சித்திரவதைகளினால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதைக் கண்டறியும் நோக்கிலேயே இவர்களின் விஜயம் அமைய உள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த குழுவினர் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருந்து, அரசாங்க அதிகாரிகள், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்புகளை சந்தித்து கலந்துரையாடல் நடத்தவுள்ளனர்.

குறித்த குழுவில், மொல்டோவைச் சேர்ந்த விக்டர் ஷஹாரியா (Victor Zaharia) தலைமையிலான இந்தக் குழுவில் மொறிஸியஸின் சட்யாபோசுன் குப்ட் டோமாஹா(Satyabhooshun Gupt Domah), சைபிரஸைச் சேர்ந்த பீட்டர்ஸ் மிசேலிட்ஸ் (Petros Michaelides) மற்றும் ப்லிப்பைன்ஸ்ஸை சேர்ந்த ஜுன் லோப்ஸ் (June Lopez) ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd