வருடாந்த தேங்காய் அறுவடை குறைவினால் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணையின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
தேங்காயின் வருடாந்தத் தேவை 4.9 பில்லியன் தேங்காய்களாக இருந்தாலும், இவ்வருடம் 1.9 பில்லியன் தேங்காய்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெப்ரவரி மாதத்துக்குள் அரசாங்கம் சரியான திட்டத்தை முன்வைக்காவிட்டால் தேங்காய் ஒன்றின் விலை 130 ரூபா வரை உயரக்கூடும் என்றார்.
நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.