தமது கோரிக்கைகள் தொடர்பில் தீர்வு வழங்காவிடின், இன்று (19) கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை நிர்வாகத்தின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக "இலங்கை மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சரித் ஜயநாத் தயாரத்ன" குறிப்பிட்டார்.