வரலாற்றுச் சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி ஆலய உலகப் பெரு மஞ்சம் தைப்பூச திருநாளான நேற்று இரவு பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
நாதஸ்வர தவில் கலைஞர்கள் மங்கள வாத்தியம் இசைக்க, தமிழ் பாரம்பரியங்களை கலைஞர்கள் வெளிப்படுத்த மஞ்சம் பவனி வந்தது.
வள்ளி-தெய்வானை சமேதரராய் முருகப் பெருமான் மஞ்சத்தில் எழுந்தருள இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வடம் பிடித்து இழுத்தனர்.
இந்நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்ட போதிலும், சுகாதாரமான நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் பக்தர்கள் நிகழ்வில் கலந்துகொள்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக யாழ் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.