'மாற்றத்துக்கான வழி' என்ற தலைப்பில் நேற்று (19) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனபலவேகய தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய ,தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், எம்.பி. சாணக்கியன் ராசமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் 'மாற்றத்திற்கான வழி' எனும் தொனிப்பொருளில் PAFFREL இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.