web log free
January 13, 2025

குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு தமிழ் பெண் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்

பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு தங்கப்பதக்கம்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து குத்துச் சண்டையில் சாதித்து வரும் கணேஷ் இந்துகாதேவி பாகிஸ்தானில் இடம்பெற்றும் சர்வதேச போட்டியில் பங்குகொள்ள தெரிவாகி பாகிஸ்தான் சென்றிருந்தார்
இந்நிலையில் ஜனவரி (18) பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட 50_55 கிலோகிராம் எடைப்பிரிவின் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

May be an image of 2 people and people standing

Last modified on Thursday, 20 January 2022 04:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd