வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை சுமார் 300 வருடங்கள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொல்பொருள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், குறித்த கல்லறையை ஆய்வு செய்வதற்காக குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
300 வருட வரலாற்றை கொண்ட வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயமானது பலருடைய நன்மதிப்பினையும் பெற்ற தேவாலயமாக கருதப்படுகின்றது.
தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது குறித்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை, குறித்த கல்லறை புராதனமானதாக இருக்க வாய்ப்புள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.