இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.
இந்த சம்பவம் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞன் திருமணமான தம்பதியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த இளைஞன் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளமையே தம்பதியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் காரணம்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி, தம்பதியினர் இளைஞரைத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்து, பின்னர் அவரது ஆடைகளை களைந்து மீண்டும் அவரைத் தாக்கியுள்ளனர்.
குறித்த இளைஞனின் துணிகளை அகற்றி அவரை நிர்வாணமாக்கி வீதியில் இறக்குவதற்கு தம்பதியினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சியம்பலாண்டுவ பொலிஸாரால் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் தற்போது சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.