இலங்கையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர், கொரோனா ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சரிடமும் சட்டமா அதிபரிடமும் ஆலோசனையைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மூன்றாம் டோஸை கட்டாயமாக்குவதற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் இவ்வாறான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்தார்.
மக்கள் சுகாதார விதிகளை கடைப்பிடிப்பதும், முன்னெப்போதையும் விட கவனமாக இருப்பதும் அவசியம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.