வவுனியாவின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய இலுப்பையடி பிள்ளையார் சிலை விசமிகளால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.
வவுனியா நகர், யாழ் வீதியில் மரக்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு அருகாமையிலிருந்த மிகவும் பழமைவாய்ந்த இலுப்பையடி பிள்ளையார் சிலையே இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டுள்ளது .
நேற்றையதினம் நள்ளிரவு முதல் குறித்த சிலையை காணவில்லையென குறித்த பகுதி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.