புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என "ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா" தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 79 அரசியல் கட்சிகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. தற்போது சட்டச் சிக்கல்கள் உள்ள பதிவு செய்யப்பட்ட ஆறு கட்சிகள் செயற்பாடற்ற அரசியல் கட்சிகளாக கருதப்படுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு பதிவு செய்ய சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப் பங்களிலிருந்து மூன்று அரசியல் கட்சிகளை பதிவு செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் முடிவு செய்தது.