web log free
April 06, 2026

'வாயை மூடிக்கொண்டிருக்க மாட்டோம்'

நான்கு வருடங்களுக்கு முன்னர் நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுக்கும் இன்று நடைமுறைப்படுத்தும் விடயங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வரவு – செலவுத் திட்ட நிதியொதுக்கீடு தொடர்பான விவாதத்தில் இன்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், பாரிய பொய்களை கூறியே ஆட்சியில் நீடித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற வேண்டாம் என்று தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்கு எதிரணியினர் எதிர்ப்பு இல்லை என்றும் கூறினார்.

“எனினும், முதலீடுகளை கொண்டு வருவதாக தெரிவித்து பொய்கூறி மக்களை ஏமாற்றினால் அதனை பார்த்து வாயை மூடிக்கொண்டிருக்க மாட்டோம்“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd