web log free
March 29, 2024

´சொத்தி உபாலியின்´ மகன் கைது

முன்னாள் பிரபல பாதாள உலக குழுத் தலைவர் என்று அறியப்படும் ´சொத்தி உபாலியின்´ மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுபெத்த பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து, இரண்டு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.