இன்று (ஜனவரி 28) காலை சலங்கந்த-ஹட்டன் பிரதான வீதியின் படல்கல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஹட்டன் டவுனில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதிவேகமாகச் சென்ற பேருந்தின் சாரதியின் ஸ்டியரிங்கின் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தை தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், ஹட்டன் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.