முசலி தேசிய பாடசாலையில் 2 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுதல்.
மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட முசலி தேசிய பாடசாலையில் ஐ.எஸ்.ஆர்.சி நிறுவனத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (27) பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், கல்வி, கலாச்சார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஐ.வரதீஸ்வரன் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
இதன் போது முசலி பிரதேச செயலாளர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.