அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.
அதற்கான காரணம் வருமாறு,
இலங்கையில் மோசடி ஒன்று தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த வர்த்தகர் ஒருவர் இரகசியமாக வெளிநாடு தப்பிச் சென்றுள்ளார்.
அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய பொலிஸார் தயார் நிலையில் இருந்த போது இந்த இராஜாங்க அமைச்சர் தனது பதவி சலுகையை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் பிரபுக்கள் பிரவேச பிரிவின் ஊடாக குறித்த வர்த்தகர் நாட்டை வந்தடைய உதவி செய்துள்ளார்.
அதன்பின் குறித்த வர்த்தகர் இராஜாங்க அமைச்சர் ஊடாகவே நீதிமன்றில் ஆஜராகி பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பிரதமருடன் கலந்துரையாடி விரைவில் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.