நாம் இந்தியாவுக்கு சோரம் போகமாட்டோம். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுவோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தம் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வினை தராது என்பதில் தெளிவாக இருப்பதாகவும் சமஷ்டிக் கட்டமைப்பில், சுயநிர்ணய தீர்வைத் தான் நாம் எதிர் பார்க்கின்றோம்.
தெளிவாக சிந்தித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.