தங்கத்தின் விலை சற்றுக் குறைந்துள்ளது. ஆனால் நீண்ட கால அடிப்படையில் தங்கத்தின் தேவை உயரும் என்றும், இந்த ஆண்டு தங்கத்தின் தேவை மீண்டும் அதிகரிக்கும் என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
இன்று இலங்கையில் தங்கத்தின் விலை 22 கரட் ரூபா 1,14,300/- ஆகவும் 24 கரட் ரூபா 1,23,500/- ஆகவும் உள்ளது.
கடந்த காலங்களில் உலக மற்றும் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.