பிரதமரின் வங்கிக் கணக்கில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட பணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் உதித் லொக்குபண்டார இணக்கம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர் அண்மையில் அலரிமாளிகைக்கு வந்து 2 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பிரதமரின் கணக்கில் இருந்து கிட்டத்தட்ட 5 கோடி ரூபா காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயம் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரதமரின் நண்பர்களை மகிழ்விப்பதற்காகவே தான் இந்தப் பணத்தைப் பெற்றதாகவும்
அந்தப் பணத்தில் ஒரு பகுதியை வேறு முதலீட்டுக்கு செலவு செய்துள்ளதாகவும் லொகு பண்டார தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.