web log free
December 22, 2024

இன்றைய ராசிபலன் – 30 ஜனவரி 2022

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அற்புதமான அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். திருமணமான தம்பதியினர் ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் புரிந்துகொள்ள முயற்சி செய்வது நல்லது. சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நினைத்ததை அடைய கூடிய யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் காரணமாக டென்ஷன் காணப்படும்.

மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்திற்கு என நேரத்தைச் செலவிட முடியாததாக இருக்கலாம். பெரியோர்களின் அனுமதி இன்றி நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாளாக தடைபட்டுக் கொண்டிருந்த காரியம் ஒன்று நடக்கும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும்.

கடகம்

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மௌனம் சாதிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. தேவையற்ற வார்த்தைகள் தேவையற்ற பிரச்சினைகளை உண்டு பண்ணும் என்பதால் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மாற்றங்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய உதவும்.

சிம்மம்

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். மற்றவர்கள் முன்னிலையில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானம் பெருக கூடுதல் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்தவொரு முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சுமூகமான உறவு நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்றம் உண்டாகும் என்பதால் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை எளிதாக சமாளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்க கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். இழுபறியில் இருந்த வேலைகள் நடக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நாணயத்துடன் நடந்து கொள்வது நல்லது. குறுக்கு வழியில் சிந்தித்தால் ஆபத்தில் முடிய வாய்ப்புகள் உண்டு.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தனிப்பட்ட முடிவுகள் சாதக பலன்களை கொடுக்க இருக்கிறது. பலரும் திசை திருப்பி விட நினைத்தாலும் நீங்கள் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே நேரத்தை ஒதுக்க முடியாமல் தவிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த கடன் தொகைகள் குறையும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளுக்கு விடிவு கிடைக்கும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடக்க இருக்கிறது. வேண்டாம் என்று விட்டு சென்றவர்கள் மீண்டும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நல்லுறவு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு ஒற்றுமை தேவை. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பெருகும். புதிய தொழில் ஆரம்பிப்பவர்கள் கைதேர்ந்த நிபுணரின் ஆலோசனை பெற்றுக் கொண்டு முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்பு தேவை.

மீனம்

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. பழைய கடன் பாக்கிகள் வசூல் ஆகும் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் என்பதால் வீட்டில் இருப்பவர்களின் தேவையை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

Last modified on Monday, 31 January 2022 03:03
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd