மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவின் வாகனத்தின் மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் மேலும் 16 பேர் வந்ததாக சந்தேகநபர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
அநுர திஸாநாயக்க மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்று கொண்டிருந்த வேளையில் மண்டபத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.