மக்கள் மத்தியில் பேசும் போது தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிகே பிரேமதாசவின் பெயரை சஜித் பிரேமதாச குறிப்பிட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
"நான் இராணுவத் தளபதியாக இருந்த போது ஜெனரல் ஆட்டிகல பற்றியோ, ஜெனரல் கொப்பேகடுவ பற்றியோ பேசவில்லை. நாங்கள் எங்களுடைய வழியில் யுத்தத்தை முன்னெடுத்தோம். ஆம், அவர்கள் மீது எங்களுக்கு மரியாதை இருந்தது, ஆனால் எமக்கு சொந்த சிந்தனை இருந்தது" என பொன்சேகா கூறினார்.
"SJB முன்னோக்கி செல்ல விரும்பினால், அது ஒரு புதிய பார்வையை பொதுமக்களுக்கு முன்வைக்க வேண்டும். முந்தைய தலைவர்களைப் பற்றி பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை," என்று பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.
தனது தந்தையின் பெயரை பகிரங்கமாக குறிப்பிட வேண்டாம் என நான் அண்மையில் அவரிடம் கூறியிருந்தேன் என பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில், பிரேமதாசவின் நடத்தை குறித்து பொன்சேகா உள்ளிட்ட கட்சியிலுள்ள பல எம்.பி.க்கள் விமர்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.