பாகிஸ்தான் சியால்கோட்டில் பிரியந்த குமார என்ற இலங்கையர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 79 சந்தேக நபர்களின் விளக்கமறியலை அந்நாட்டு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (ATC) திங்களன்று நீட்டித்துள்ளது.
குஜ்ரன்வாலாவில் உள்ள ஏடிசி வளாகத்தைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
அவர்களை பிப்ரவரி 14 ஆம் திகதி ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.
சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் ஏற்கனவே நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.