காலியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியுடன் புகையிரதம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி, ரத்கம பிரதேசத்தில் உள்ள வெல்லபட புகையிரத கடவையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரஜரட்ட ரெஜினி விரைவு ரயிலில் முச்சக்கரவண்டி மோதியுள்ளது.
மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடங்குகின்றனர்.