web log free
April 06, 2026

அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்

மின்சார நெருக்கடிக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மின்வெட்டுக்குப் பின்னால் யாரும் அறியாத இரகசியம் ஒன்று இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

நீதிமன்ற வளாகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குத் தேவையான பணத்தைத் திரட்டிக் கொள்வதற்காக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறதா என்று சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd