web log free
December 22, 2024

விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கு சுதந்திர தினத்தில் சந்தோஷமான செய்தி!

 

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தாம் சிறையில் இருந்த போது விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பலர் தம்மை அணுகி தமது வாழ்க்கை கதைகளை கூறியதாக ஞானசார தேரர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் கைதிகளை விடுவிக்குமாறு தற்போதைய ஜனாதிபதியிடம் தாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலகிலும் ஐரோப்பாவிலும் உள்ள தமிழ் பிரிவினைவாத சக்திகள் ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து நாட்டுக்கு எதிராக அணிதிரளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனவரி 20ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது, ​​இந்தக் கைதிகளை விடுவிப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய போது "அது செய்யப்பட வேண்டும்" என்பதை ஜனாதிபதி மனதில் வைத்திருந்ததாக ஞானசார தேரர் குறிப்பிட்டார.

விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களை விடுவித்தால், பிரிவினைவாத இருண்ட நிழல்கள் மறைந்துவிடும் எனவும், சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி ஒரு சிலரையாவது விடுதலை செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd