web log free
December 22, 2024

இன்று சனிக்கிழமை உங்கள் இராசிக்கு நன்மையா தீமையா? விபரம் உள்ளே

திகதி: சனிக்கிழமை, 5 பெப்ரவரி 2022
இன்று நாள் எப்படி?
 
நல்ல நேரம்
பகல்: 11:00AM - 12:00PM
மாலை: 5:00PM - 6:00PM
இராகுகாலம்
காலை: 9:00AM - 10:30AM
இரவு: 3:00AM - 4:30AM
குளிகை
காலை 6:00AM 7:30AM
இரவு 10:30PM 12:00AM
எமகண்டம்
பகல்: 1:30PM - 3:00PM
இரவு: 7:30PM - 9:00PM
திதி
சதுர்த்தி, காலை 7:21AM
நட்சத்திரம்
உத்திரட்டாதி, இரவு 7:42PM
சந்திராஷ்டமம்பூரம், உத்ரம்.
பரிகாரம்தயிர்
சூலம்கிழக்கு
 
உங்கள் இராசிபலம் எப்படி?
மேஷம்
வியாபாரிகளுக்கு இலாபங்கள் ஓரளவு குறையும். பெண்களால் பெரிய தொகை விரயமாகும். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். உங்கள் திறமைக்கு மதிப்பு இருக்காது.
ரிஷபம்
எதிர்பார்ப்புக்கு மேல் இலாபங்கள் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்குச் சென்று மன மகிழ்ச்சி அடைவீர்கள். எல்லா வகையிலும் ஏற்றம் வரும். பெண்களால் லாபம் ஏற்படும்.
மிதுனம்
தனவரவுகள் தாராளமாய் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையால் உற்சாகம் மிகும். வங்கி அதிகாரிகள் தொழில் விரிவாக்கத்துக்குக் கடன் தந்து உதவுவர்.
கன்னி
பலவழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். வாகன சுகமும், மதிப்பு மரியாதையும் கூடும். காதல் வலையில் விழ நேரலாம். சிலருக்கு மனைவி மூலமாக நன்மைகள் ஏற்படும்.
மகரம்
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி, சுகம் ஆகியவை அதிகரிக்கும். மனத்தெம்பும், மன மகிழ்ச்சியும் ஏற்படும். மனைவியின் ஒத்துழைப்பால் பணவரவு அதிகரிக்கும்.
கடகம்
முயற்சி திருவினையாகி எளிதில் வெற்றி கிடைக்கும். தீர்த்த யாத்திரைகளால் தெய்வ நம்பிக்கை கூடும். மன அமைதி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் இருக்கும்.
சிம்மம்
அரசு உதவிகள் தாமதப்படும். ஆரோக்கியக் குறைவால் வேண்டாத மனக்கவலை ஏற்படலாம். மனைவியின் கலகத்தால் குடும்பத்தாரிடையே ஒற்றுமை குறையலாம்.
துலாம்
புதுப் பெண்கள் சினேகத்தால் மகிழ்ச்சி உண்டாகும். சொந்தவீடு வாங்க முயல்வீர்கள். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கி, எதிர்பார்த்த இடங்களில் இருந்து தனவரவு உண்டாகும்.
மீனம்
தங்கள் தனிப்பட்ட திறமை காரணமாக காரிய வெற்றி ஏற்பட்டு பாராட்டும் பெறுவீர்கள். பலவழிகளிலும் பணவரவு உண்டு. வியாபாரிகளுக்கு, இன்று சிறந்த பேச்சே மூலதனமாகும்.
தனுசு
பழகிய தோழர்களே பணமோசம் செய்வர் எனவே, ஏமாறாமல், எதிலும் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். மற்றவர் வேலையில் மூக்கை நுழைத்தால் உங்கள் காரியங்கள் தடைப்படும்.
விருச்சிகம்
கடினமாக உழைத்தால் கட்டாயம் வெற்றி கிட்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கதவைத் தட்டும்.
கும்பம்
உடற் சோர்வால் உள்ளமும் சோர்வடையும். எடுத்த காரியங்களில் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுங்கள். குடும்பத்தாரிடையே வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd