தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதிக்கு விஜயம் செய்து மீனவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
இந்திய மீன்பிடி படகுகள் அத்துமீறலை கண்டித்தும், வத்திராயன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 2 மீனவர்களுக்கு நீதி கேட்டும் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.