அவுஸ்திரேலியாவிடம் இருந்து 221 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முக்கியமாக பருப்பு மற்றும் பார்லி கொள்வனவு செய்ய கடனைப் பெறுவதாக கூறிய அவர், மீதமுள்ளவை மற்ற அத்தியாவசியப் பொருட்களுக்குப் பயன்படுத்தலாம் என்றும் கூறினார்.
எதிர்வரும் புத்தாண்டு காலம் உட்பட அடுத்த சில மாதங்களுக்கு இலங்கைக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்தியாவினால் ஒரு பில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மேலும், சீனாவிடம் இருந்து ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி கோரப்பட்டுள்ளதாகவும், அதற்கு சீனா இணங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.