சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (07) காலை 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தாதியர்கள், மருத்துவ ஆய்வக விஞ்ஞானிகள், மருந்தாளுனர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல நிபுணர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.