தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணி ஆகியவற்றின் மகளிர் தினம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் சனிக்கிழமை (05) ஹட்டனில் இடம்பெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ பழனி திகாம்பரம் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ.மயில்வாகனம் உதயகுமார் ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிரணி தலைவியும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான திருமதி. சரஸ்வதி சிவகுரு ,தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.பிலிப், தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் திருமதி வைலட்மேரி, தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான முத்தையா ராம், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக பணிப்பாளர் Dr. நந்தகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரர்களான சிவானந்தன், ராஜமாணிக்கம் , சிரேஷ்ட உபதலைவர் மாணிக்கம், உதவிச் செயலாளர் சிவகுமார், பிரதி தேசிய அமைப்பாளர்களான கல்யாணகுமார், பிரசாந்த், பிரதேச சபை உறுப்பினர்களான ரவிச்சந்திரன், நாகேந்திரன், சுதாகரன், ராஜ்அசோக்,அவிஸ், சசிகலா, சுஜிகலா, மஞ்சுளா, நிர்மலா தேவி, ராமேஸ்வரி உட்பட தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் செயற்பாட்டாளர்கள், பெண்கள் பிரிவினர் ,பணிமனை முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.