web log free
June 25, 2026

மின்சார கட்டணம், எரிபொருள் விரைவில் பாரிய விலையேற்றம்!

 

பாரியளவில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த கூட்டணி தெரிவித்துள்ளது.


எரிபொருட்களின் விலையை அதிகரிக்கப்போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்த போதிலும், விரைவில் எரிபொருள் விலையை நிச்சயமாக அதிகரிப்பார்கள் என அதன் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் மின்கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என்றும் இன்று அதிகளவு மின்சாரம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதன்படி, எரிபொருள் மற்றும் மின்சார விலைகள் வெகுவிரைவில் கணிசமான அளவு அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd