நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் ஏற்படுத்தப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மலையக அரசியல் அரங்கம் முன்னெடுத்துவரும் வடக்கு முதல் தெற்கு வரையான கையெழுத்து பெறும் திட்டத்தின் அடுத்தக் கட்டம் கொழும்பில் இடம்பெறவுள்ளது.
அதன்படி கொழும்பு டீன்ஸ் வீதி 281ம் இலக்க முகவரியில் உள்ள சமூக கேந்திர நிலையத்தில் பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது.
நுவரெலியா மாவட்ட மக்களுக்கு நியாயம் கோரும் வகையில் மலையக அரசியல் அரங்கம் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
நுவரெலியா, யாழ்ப்பாணம் என பல மாவட்டங்களிலும் இவ்வாறு கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டமானது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் பிரநிதிதித்துவப்படுத்தும் கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.