web log free
October 18, 2024

நிபந்தனைகளுடன் இணக்கம்

போலியான ஆவணமொன்றை காண்பித்து இனவாதத்தை தூண்டியதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க மீது தொடரப்பட்டுள்ள வழக்கினை விரைவில் நிறைவுக்கு கொண்டுவருவதற்கு இணக்கம் வெளியிட்ப்பட்டுள்ளது.

குறித்த வழக்கினை விரைவில் முடித்துக்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நிபந்தனையுடன் இணக்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, இந்த வழக்கினை ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொது செயலாளராக கடமையாற்றிய திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, கட்சியிலிருந்து வெளியேறி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு தனது ஆதரவை தெரிவித்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

அச்சமயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது ஐக்கிய தேசியக் கட்சிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே ரகசிய ஒப்பந்தமொன்று இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக போலியான ஆவணமொன்றை காண்பித்ததன் மூலம் அவர் இனவாதத்தை தூன்டியதாக குற்றம்சாட்டி சட்ட மா அதிபர் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைகள் கடந்த சில வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வழக்கினை விரைவாக நிறைவு செய்துகொள்வது தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் கருத்து பறிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.