ஹலிஎல டீன்புர அம்போக்க பகுதியில் 14 வயதும் 7 மாதமும் நிரம்பிய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி 4 மாதம் கர்ப்பிணியாக்கிய 42,36,28 வயதுகளை உடைய மூன்று நபர்களை ஹாலிஎல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டபோது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.
விடயத்தை அறிந்திருந்தும் குறித்த சிறுமியின் தாயார் மறைத்துள்ளார்.
இதனால் சிறுமியின் தாயாருடன் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்த ஹாலிஎல பொலிஸார் சந்தேக நபர்களை பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய நிலையில் சந்தேக நபர்களை 14 நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.