அரசியல் தீர்வு கேட்கும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு இறுதியில் ஏமாற்றமே எஞ்சியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் நாளுக்கு நாள் புதிது புதிதாக பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன.
குறிப்பாக சிறுபான்மை தமிழ் மக்களின் அபிலாஷைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. அரசியல் தீர்வு கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இநதநிலையில்அதிகாரப்பரவலாக்கம் இன்றியமையாதது என இந்தியா கூறி கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது
நாட்டின் இனப்பிரச்சினைக்கான தற்காலிக தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தின் மூலம் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், இன்று அந்த மாகாண சபை முறையையும் முழுமையாக அமுல்படுத்தாத நிலையே காணப்படுகிறது. மாகாண சபைகள் கலைக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகி -. இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது.
தேர்தலை நடத்தினால் தோல்வி நிச்சயம் - என்ற அச்சத்தில் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல இழுத்தடிப்பு செய்து வருகிறது. உள்ளூராட்சி சபை தேர்தல் பிற்போட பட்டது போன்று - மாகாண சபை தேர்தலையும் - பிற்போடும் நாடகத்தை - அரசாங்கம் அரங்கேற்றி வருகிறது. என்னதான், நாடகம் அரங்கேற்றினாலும் - இந்த அரசாங்கத்திற்கு மூட்டை - முடிச்சுகளை கட்டிக் கொண்டு - வீட்டுக்கு செல்லும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
தேர்தல் நடத்த சட்டப்பிரச்சினை இருந்தால் - அதற்கான திருத்தத்தை - பாராளுமன்றுக்கு கொண்டு வாருங்கள் -. அதற்கு நாங்கள். பூரண ஆதரவு தருகிறோம் -. பின்னர் தேர்தலை நடத்துங்கள் -. அந்த தேர்தல் இந்த அரசாங்கத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும்
நடைமுறையிலுள்ள அவசரகால சட்டமானது - இலங்கை மனித உரிமைகளை மீறும் நாடு - ஜனநாயகத்தை மதிக்காத நாடு - என்ற அவப்பெயரை சர்வதேச அளவில் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
நாட்டில் அசாதாரண யுத்த சூழ்நிலை காணப்பட்ட போது பயங்கரவாத தடை சட்டம் அமலில் இருந்தது. ஆனால்,,இன்று அதற்கான தேவை இல்லை
அப்படி இருக்கும்போது – அரசாங்கம் இந்த பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்தி - ஜனநாயக குரல்வளையை நசுக்க பயன்படுத்தி வருவதை காணமுடிகிறது.
தற்காலத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக கைதுசெய்யப்பட்ட சிலர் - வழக்கு விசாரணையில் நிரபராதிகள் ஆக விடுவிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் - நீதிமன்றத்தின் மூலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
சர்வதேச அழுத்தங்களின் காரணமாக பயங்கரவாத தடை சட்டத்தில் - ஒரு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ள போதும் - முக்கிய விடயங்களில் திருத்த முன்மொழிவுகள் உள்ளடக்கப்பபடவில்லை எனினும், இந்த சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகும்.
நாட்டில் இன்று எரிபொருள் விலை மீண்டும் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அனைத்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் - தட்டுப்பாடு ஏற்படும் பொருட்கள் பட்டியலில் கடதாசியும் இணைந்துள்ளது.. அத்துடன், கடதாசி தாங்கிய சுமார் 8 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடன் வாங்குவதற்கு மாத்திரம் - ஏனைய நாடுகளை நாடிச் செல்லாமல் அங்கு முன்னெடுக்கப்படும் சிறந்த திட்டம் குறித்தும் கவனம் செலுத்தி அதனை செயற்படுத்த முயற்சிக்க வேண்டும். உதாரணமாக, எமது அண்டைய நாடான இந்தியாவின் அண்மையில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்
தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டு டிஜிட்டல் வரவு செலவுத் திட்டமாக முன்வைக்கப்பட்டது. இங்கு எவ்வித கடதாசி பயன்பாடும் இன்றி செலவீனம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற திட்டங்கள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.
நாட்டில் தற்போது கேஸ் வெடிப்பு நாடகம் ஒத்திவைக்கப்பட்டு தற்போது எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காத அரிசி விலை காரணமாக மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். இந்த அரசாங்கத்தால் இன்னும் அரிசி விலையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கும் கொரோனாவை காரணம் காட்டி தற்போது வௌிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கி கிடக்கின்றன - அவற்றில் சுமார் 500 அரிசி கொள்கலன்களும் அடங்கும்.
நாட்டில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் கொரோனாவை காட்டி நழுவிச் செல்லும் கைங்கரியத்தையே அரசாங்கம் கையாண்டு வருகிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டு்ள்ள பொருளாதார நெருக்கடி கொரோனாவால் ஏற்பட்டதல்ல - கடனால் ஏற்பட்டது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்க அந்த அரசாங்கம் கண்ணை மூடிக்கொண்டு பணம் அச்சிட்டதே காரணம் என்பதுடன் பணம் அச்சிடுவதில் சாதனை படைத்துள்ள அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் இதுவரை ஒரு லட்சத்து 49 அயிரத்து 905 கோடி ரூபா பணத்தை அச்சிட்டுள்ளது. இதனால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்ததுடன் - பொருட்களின் விலையும் அதிகரித்து - கடன் சுமையும் அதிகரித்துள்ளது.
தெ்ற்காசியாவில் பணவீக்கம் அதி்க்ம் உ்ள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது - அதேபோல ஆசியாவில் பணவீக்கம்
வேகமாக அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் ஆசியாவிலேயே இலங்கை தான் முதலிடத்தில் உள்ளது. அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் மற்றும் முடிவுகள் காரணமாக நாட்டு மக்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். எனவே, மக்களின் இந்த கஷ்ட நிலையை கருத்திற் கொண்டு - அரச ஊழியர்களுக்கு வழங்கியுள்ள 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு - தனியார் ஊழியர்களுக்கும் - 500 ரூபா பெறுமதியான கோதுமை மா கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ள - பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் 5000 ரூபா வழங்கப்பட வேண்டும்.
இந்நிலையில் நாட்டை முன்னேற்றுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் நாட்டை படுபாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக மூடிஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால், இலங்கை CCC தரத்திலிருந்து CC தரத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. உலக நாடுகளில் 'பட்டினி' மதிப்பீட்டு தரவரிசைப்படுத்தலில் 116 நாடுகளில் இலங்கை 65 வது இடத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் இலங்கை 129-ஆவது இடத்தில் உள்ளது.
TRANSPARANCY INTERNATIONAL நிறுவனத்தால் 2021 ஆம் ஆண்டுகான ஊழல் மதிப்பாய்வு தரவரிசையில் இலங்கை 94ஆம் இடத்தில் இருநது
102ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது
டிசெம்பர் மாதத்தில் 3.3 பில்லியன் அன்னிய செலவாணி கையிருப்பில் இருப்பதாக மார்த்தட்டிய அரசாங்கத்திடம் தற்போது அது சுமார் 2 பில்லியனாக குறைந்துள்ளதுடன் அதில் அமெரிக்க டொலர் கையிருப்பு 1 பில்லியனை விட குறைவாகவேயுள்ளது. தற்பொது இந்தியாவின் உதவியும் ஒத்துழைப்பும் மாத்திரமே எமக்கு உந்து சக்தியாக உள்ளது. எல்லாம் நடந்து முடிந்து - மூக்கு மூழ்கு அளவிற்கு - தண்ணீர் நிரம்பிய பின்னர் - உதவியை நாடுவதற்கு ஒப்பாக - இந்த அரசாங்கம் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்த பின்னர் - தற்போது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்கிறது.
ஆரம்பத்தில் கொரோனா பரவலின் போது, விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளாது - ஆற்றில் பானையை வீசியது போலவே பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்த பின்னர் தற்போது தான் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்கின்றனர். இப்படியே தான்தோன்றித்தனமாக அரசாங்கம் செயற்பட்டு - நாட்டு மக்களை இறுதியில், எங்கே கொண்டு நிறுத்தப்போகிறது - என்ற அச்சத்துடன்- சந்தேகத்துடன் - எனது உரையை முடிக்கிறேன்." இவ்வாறு கூறினார்.