காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையை முறையாக நடத்தினால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தூக்கில் தொங்க வேண்டிய நிலை ஏற்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சபையில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
காணாமல் போனவர்கள் விடயம் உள்ளிட்ட பலவற்றிலும் மக்களை உசுப்பேத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் கஜேந்திரகுமார் அணி அதற்கு வெளிநாடுகளில் பணம் பெறுவதாக ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் போதே செல்வராசா கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.