மாகாணசபை தேர்தல் சட்டத்தை திருத்தி, பழைய விகிதாசார முறையில் மாகாணசபை தேர்தலை நடத்தும்படியான யோசனையை அரசுக்கு முன் வைக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று வியாழக்கிழமை(10) கூடிய தேர்தல் முறை சீர்திருத்த குழுவில் இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்தோடு, உள்ளூராட்சி தேர்தல் முறையிலும் சில சீர்திருத்தங்களை செயற்படுத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதன்படி எதிர்வரும் 22ம் திகதி அடுத்த கூட்டம் நடைபெறும்போது, இவை குறித்து ஆய்வு செய்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.