நாடு முழுவதிலும் உள்ள பல கல்குவாரி தளங்களுக்கு கொண்டு வரப்பட்ட பல்வேறு வகையான வெடிமருந்துகள் வெவ்வேறு அளவுகளில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கல்குவாரிகளுக்கு கொண்டு வரப்படும் வெடிமருந்துகள் காணாமல் போவது அல்லது தவறான இடத்தில் வைப்பது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக சிறப்பு கண்காணிப்பு பணியை தொடங்க அரசுக்கு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.
ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, லியங்கஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள கல்குவாரி ஒன்றுக்கு வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்ட அளவோடு ஒப்பிடும் போது, அதில் எவ்வித வெடிப்பும் இடம்பெறவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகளவு வெடிமருந்துகளுக்கு என்ன ஆனது என்ற தகவல் வெளியாகவில்லை என கணக்காய்வு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற சம்பவங்கள் மற்ற பகுதிகளிலும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு முன்னரும் இவ்வாறு வெடிமருந்துகள் காணமல் போனமை குறிப்பிடத்தக்கது.