அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டத்தில் அரசாங்கத்தின் முக்கிய சில அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.
அதில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவும் அடங்குவார்.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
உரப்பிரச்சினையால் விவசாயத்துறை அமைச்சர் விவசாயிகளின் கடும் எதிர்ப்பை சில நாட்களாக எதிர்கொள்வதே இதற்குக் காரணம்.
ஜனாதிபதி இருக்கும் மேடையில் விவசாய அமைச்சருக்கு எதிராக மக்கள் கூச்சலிட்டால் பொருத்தமாக இருக்காது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பேச்சாளரான மஹிந்தானந்த அளுத்கமகே இம்முறை அநுராதபுரம் - சல்காதுபிடிய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.