உக்ரேனில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நிலவும் போர் சூழல் காரணமாக, உக்ரைனில் வசிக்கும் தமது நாட்டு குடிமக்களை வெளியேறுமாறு பல நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், உக்ரேனில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது:
உக்ரேனில் தற்போது சுமார் 40 இலங்கையர்கள் உள்ளனர். அவர்களில் 7 பேர் மாணவர்கள். இந்த இலங்கையர்கள் தற்போது எந்தவித பிரச்சினையும் இன்றி அங்கு தங்கியுள்ளனர். அங்கு அவசரநிலை ஏற்பட்டால், இலங்கையர்களை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்ரேனில் இலங்கைத் தூதரகம் இல்லாததால், துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாகவே இந்த விடயங்கள் கையாளப்படுகின்றன என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா சுமார் 100,000 துருப்புகளைக் குவித்துள்ளது. இதனால், உக்ரேனில் போர் சூழல் நிலவுகிறது.