web log free
May 23, 2026

வெற்றிப்பெறும் பெரும்பான்மை உள்ளது

வரவு -செலவுத் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மை அரசாங்கத்திடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வரவு -செலவுத் திட்ட இறுதி வாக்களிப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லையொன்றும் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பிலும் அரசாங்கம் பெரும் வெற்றியைப் பெற்றிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியில் தற்போது பெரும் பிரச்சினைகள் நிலவுவதாக தெரிவித்த அமைச்சர், அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக இரண்டாவது வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றிபெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் எத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தாலும் அரசாங்கம் வெற்றிபெறுவது உறுதியென்று கூறிய அமைச்சர், எதிர்வரும் 10 வருடங்களுக்கு ஐ.தே.கட்சியே ஆட்சியிலிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd