web log free
December 22, 2024

தனிவழி செல்லும் சுதந்திர கட்சி, சிரேஸ்ட தலைவர் வீட்டில் ஆலோசனை

அரசாங்கத்தில் இருந்து தனித்து செயல்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக ஏசியன் மிரருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

"உள்ளாட்சித் தேர்தல் வரப் போகிறது. அந்தத் தேர்தலில் தனித்தனியாகக் கேட்கத் தயாராகுங்கள்." என்  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி பதுளை சைமன் பீரிஸ் ஞாபகார்த்த மண்டபத்தை அண்டியுள்ள அமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் பதுளை தொகுதியின் பிரதேச அமைப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளதாக ஏசியன் மிரருக்கு செய்தி வந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி பதுளைக்கு வருவதற்கு தயாராகும் வகையில் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

“மொட்டுடன் கைகோர்த்து வாக்கு கேட்டாலும் நாங்கள் எதிர்பார்க்கும் வேட்புமனு கிடைக்காது. எனவே தனித்து கேட்க தயாராக வேண்டும். எங்கள் கட்சிக்கு தனித்து கேட்பது கடினம். . ஆனால் நாம் அதை செய்ய வேண்டும். அதற்கு இப்போதே தயாராகுங்கள்." என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“மொட்டுக்கு இப்போது மக்கள் அலுத்துவிட்டனர். என அமைச்சர் கூறியதாக ஏசியன் மிரருக்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd