எதிர்வரும் தேர்தலை இலக்கு வைத்து புதிய கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் வன்னி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பல அரசியல் கட்சிகள் உருவாக்கப்படவுள்ள கூட்டமைப்பில் இணையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். நாட்டுக்காக உழைக்கக் கூடிய பல சகோதர அரசியல் கட்சிகள் இவ்வாறு ஒன்றுபடும் என்றார். அடுத்த தேர்தலில் இந்த கூட்டணியின் மூலம் வெற்றி பெற பாடுபடுவேன் என்றும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது நாடளாவிய ரீதியில் நகர்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் நம்பிக்கையில் இவ்வாறான கட்சி அமைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சிறிசேன வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அரசாங்கத்துடன் இணைந்த கட்சியாக உள்ளதாகவும் அவர் நினைவுபடுத்தினார்.
எனவே, அரசாங்கத்தை தாம் தொந்தரவு செய்யப்போவதில்லை என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டு மக்களின் பிரச்சினைகளில் தமது கட்சி தலையிடும் எனவும் தெரிவித்தார்.