இன்றைய தினம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
போதிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதே இதற்கு காரணம்.
இதன்படி, தென் மாகாணத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஏனைய மாகாணங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை பிரதேச அடிப்படையில் ஒரு மணிநேரம் மின்சாரம் தடைப்படும்.
இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.