ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு நபர் ஒருவரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்று (20) ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தோட்டக்கனத்த பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார்.
சந்தேகநபர் ஹம்புருகலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குச் சென்று கடனை வழங்கவில்லை என்பதற்காக கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.