மேஷம்-எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுக்கும் நாள். எதிர்பார்த்த செய்திகள் மடல் மூலம் வந்து சேரும். இழுபறியாக இருந்த காரியமொன்று இனிதே முடியும். வழக்குகள் சாதகமாகும். உத்யோக முயற்சி கைகூடும்.
ரிஷபம்-கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன் சுமை குறையும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். உடல் நலத்தில் இருந்த சோர்வுகள் அகலும். வருமானம் திருப்தி தரும்.
மிதுனம்-நன்மைகள் நடைபெறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பிறர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும்.
கடகம்-தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணி புரிவீர்கள். உறவினர் பகை மாறும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்-அஞ்சல் வழியில் ஆச்சரியமான தகவல் வந்து சேரும் நாள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். புதிய மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். திருமண முயற்சி வெற்றி தரும்.
கன்னி-எடுத்த காரியங்கள் எளிதில் வெற்றி கிட்டும் நாள். செல்வநிலை உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள். புண்ணிய காரியங்களுக்கு அள்ளிக் கொடுப்பீர்கள்.
துலாம்-கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்தி உண்டு. கொடுக்கல் வாங்கல்களில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
விருச்சகம்-முன்னேற்றம் கூடும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். தொலைபேசி வழியே தொழில் முன்னேற்றம் தகவல் வந்து சேரும்.
தனுசு-பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் நாள். வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலத்தில் சிறுஇடையூறுகள் ஏற்பட்டு அகலும்.
மகரம்-வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முயற்சி எடுக்கும் நாள். நண்பர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரிவர். வெளிநாட்டுப் பயணம் விரும்பியபடியே கை கூடுவதற்கான அறிகுறி தோன்றும்.
கும்பம்-சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்பப் பெரியவர்களின் யோசனைகளைக் கேட்டு நடக்க முற்படுவீர்கள். உத்தியோக நலன்கருதி பயணமொன்றை மேற் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
மீனம்-உணர்ச்சிவசப்படுதவன் மூலம் உறவுகள் பகையாகும் நாள். சிரித்துப்பேசும் நபர்களால் சிக்கல்கள் ஏற்படலாம். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.