web log free
December 21, 2024

மரண வீட்டில் வாய்பேசச் சென்று அசிங்கப்பட்ட சின்ன தம்பி இராஜாங்க அமைச்சர்!

தலவாக்கலையில் மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த ஆசிரின் மரண சடங்கில் மலையகத்தைச் சேர்ந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் கலந்து கொண்டார். 

மலையக அரசியல் களத்தில் சின்னத் தம்பி என அறியப்பட்ட இவர் மரண வீட்டுக்குச் சென்றதும் ஊடகவியலாளர்கள் இவரை கண்டு நெருங்கியுள்ளனர். 

உடனடியாக ஊடகங்கள் முன் தனது அரசியல் பேச்சை ஆரம்பித்த இந்த இராஜாங்க அமைச்சர்  வடக்கில் மீனவர்கள் பிரச்சினை தமிழ்நாடு விஜயம் என வசனங்களை அவிழ்த்துவிடத் தொடங்கினாராம். 

மரம் முறிந்து விழுந்து உயிரிழந்த ஆசிரியர் குறித்தும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசாமல் இருந்ததால் அருகில் இருந்தவர்கள்  ஆத்திரமடைந்து தங்களது பிரச்சினை பற்றி பேசுமாறு கூச்சலிட்டுள்ளதுடன் மீனவர் பிரச்சினை பேசுவதாயின் இங்கிருந்து செல்லுமாறும் கூச்சலிட்டுள்ளனர்.

இதனால் அங்கு சிறு பரபரப்பு ஏற்பட்ட நிலையில்  பொலிஸார் தலையிட்டு இராஜாங்க அமைச்சரவை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். 

மரண வீட்டு சோகத்தில் சுற்றி இருந்தவர்கள் சற்று மது அருந்தி இருந்ததையும் மறைப்பதற்கில்லை. 

இராஜாங்க அமைச்சர் அசிங்கப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd